டிஎன்பிஎல் 2021: திருச்சி பந்துவீச்சில் சுருண்ட திருப்பூர்!
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 111 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

TNPL 2021 : Tiruppur finish with 110 on the board (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரின் 14ஆவது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியஸ் , திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய திருப்பூர் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விகெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் அந்த அணியில் சிலரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை எடுத்தது. திருச்சி வாரியர்ஸ் அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News