டிஎன்பில் 2021: இன்றைய போட்டி விவரங்கள்!
ஐந்தாவது சீசன் டிஎன்பிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு சீசனில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியும், திருச்சி அணி ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளன. இதனால் 2ஆவது வெற்றியை பொறப்போவது யார்? என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
அதேபோல் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2ஆவது ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் புள்ளிப்பட்டியலில் 3 புள்ளியுடன் இருக்கும் கோவை கிங்ஸ் அணி 2ஆவது வெற்றியைப் பெறும் ஆர்வத்தில் உள்ளது. அதேசமயம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தனது முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
Win Big, Make Your Cricket Tales Now