
தமிழ்நாடு சூப்பர் லீக் தொடரின் 6ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் நிரஞ்சன் அதிரடியாக பேட்டிங் ஆடி 27 பந்தில் 47 ரன்களை விளாசினார். பாபா அபரஜித் 27 பந்தில் 34 ரன்கள் அடித்தார். 4ஆம் வரிசையில் இறங்கிய சஞ்சய் யாதவ் நிதானமாக தொடங்கினார். ஆனால் களத்தில் சற்று நிலைத்தபின்னர், அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்தார்.
அவருடன் இணைந்து கேப்டன் பாபா அபரஜித்தும் அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த சஞ்சய் யாதவ் 42 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 70 ரன்களை குவித்தார். இந்திரஜித் 18 பந்தில் 34 ரன்களை விளாச, 20 ஓவரில் 209 ரன்களை குவித்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி, 210 ரன்கள் என்ற கடின இலக்கை மதுரை பாந்தர்ஸுக்கு நிர்ணயித்தது.