
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கவுசிக் காந்தி 19 ரன்களும், மற்றொரு துவக்க வீரர் ஜெகதீசன் 15 ரன்களும் சேர்த்தனர்.
அதன்பின்னர், திருச்சி பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடச் செய்த ராதாகிருஷ்ணன் 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் விளாசினார். உதிரசாமி சசிதேவ் 35 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 65 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர். திருச்சி தரப்பில் அஜய் கிருஷ்ணா, பொய்யாமொழி தலா 3 விக்கெட் எடுத்தனர்.