டிஎன்பிஎல் 2022: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ்!
திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இத்தொடரில் இன்று மாலை 3.15 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியும், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அந்த அணியின் அரவிந்த் 27 ரன்னுக்கும், ஸ்ரீகாந்த் அனிருத்தா 39 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.
Trending
அடுத்ததாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 21 ரன்களும், ராகேஜா 20 ரன்கள், ராஜ்குமார் 14 ரன்கள் எடுத்து நிலையில் வெளியேறினர். மான் 20 ரன்னும், அஸ்வின் 10 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. லைகா கோவை கிங்ஸ் தரப்பில் பாலு சூர்யா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கோவை அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஸ்ரீதர் ராஜூ 5 ரன்னுடன் வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த சுரேஷ்குமாரும், சாய் சுதர்சனும், அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
இதில் 44 பந்துகளை எதிர்கொண்ட சுரேஷ்குமார் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 83 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். சாய் சுதர்சன் 41 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் லைகா கோவை கிங்ஸ் அணி 15.2 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now