Advertisement

டிஎன்பிஎல் 2023: ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தி ராயல் கிங்ஸ் வெற்றி!

சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

Bharathi Kannan
By Bharathi Kannan June 23, 2023 • 10:24 AM
TNPL 2023: Nellai Royal Kings beat Salem Spartans by 5 wickets in rain irrupted match!
TNPL 2023: Nellai Royal Kings beat Salem Spartans by 5 wickets in rain irrupted match! (Image Source: Google)
Advertisement

டிஎன்பில் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்கவிருந்த நிலையில் மழையால் தாமதமானது.

பின்னர், மழை நின்றபின் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது. சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, திடீரென மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி தற்போது நிறுத்திவைக்கப்பட்டது.

Trending


அப்போது, முகமது கான் 10 ரன்களுடனும், அபிஷேக் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முதல் பாதியில் சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது. இரண்டாவது முறையாக மழையால் போட்டி நிறுத்தப்பட்டதால் தற்போது ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி நெல்லை அணிக்கு 16 ஓவர்களில் 129 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய நெல்லை அணியில் அருண் கார்த்திக் ரன்கள் ஏதுமின்றியும், நெரஞ்சன் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய குருசுவாமி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். 

ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ஈஸ்வரன் 18 ரன்களிலும், சோனு யாதவ் 8 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குருஸ்வாமியும் 39 ரன்களில் விக்கெட்டை இழந்தனார். அதன்பின் காளமிறங்கிய சூர்யபிரகாஷ் யாரும் எதிர்பாராத வகையில் 14 பந்துகளில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என 33 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சூர்யபிரகாஷ் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement