முதல் பந்தை சிக்சருக்கு அனுப்புவேன் என்பது அணிக்கு முன்னரே தெரியும் - இஷான் கிஷான்
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கவுள்ளேன் என அனைவரிடமும் கூறியதாக இளம் வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களைக் குவித்தது.
பின்னா் ஆடிய இந்திய அணி 34 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதில் கேப்டன் தவான் ஆட்டமிழக்காமல் 86 ரன்களை எடுத்தார். பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்களை விளாசினார். 33 பந்துகளில் தனது அரை சதத்தைக் கடந்த அறிமுக வீரர் இஷான் கிஷன், 2 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அசத்தினார்.
Trending
2001 ஆண்டுக்குப் பிறகு அறிமுக ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்கிற பெருமையையும் இஷான் கிஷான் பெற்றுள்ளார் .
இந்நிலையில் இதுகுறித்து பேசிய இஷான் கிஷான்,“முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பேன் என இந்திய அணியின் ஓய்வறையில் இருந்த அனைவரிடமும் சொல்லியிருந்தேனன். எந்த பந்துவீச்சாளராக இருந்தாலும் நான் சிக்ஸர் அடிக்க இருந்தேன். இது அனைவருக்கும் தெரியும்.
நல்ல ஆடுகளம், என்னுடைய பிறந்த நாள், என்னுடைய முதல் ஒருநாள் ஆட்டம் என எல்லாமே எனக்குச் சாதகமாக இருந்தன. என் பிறந்த நாளன்று நன்றாக விளையாடி அணிக்கு வெற்றியை அளிக்க எண்ணினேன். பயிற்சியின்போதே நான் 3ஆம் வரிசையில் களமிறங்குவேன் என டிராவிட் கூறியிருந்தார். அதன்படியே நானும் மூன்றாம் வரிசையில் களமிறங்கி எனது அதிரடியை வெளிப்படுத்தினேன்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now