பிக் பேஷ் தொடரிலிருந்து டாம் கரண், பென் மனேண்டி விலகல்!
டாம் கரண் மற்றும் பென் மனேண்டி ஆகியோர் காயம் காரணமாக நடப்பாண்டு பிக் பேஷ் லீக் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக் தொடரின் 11ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சிட்னி சிக்சர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து அணியின் டாம் கரண், ஆஸ்திரேலியாவின் பென் மனேண்டி ஆகியோர் காயம் காரணமாக நடப்பு சீசனிலிருந்து விலகியுள்ளனர்.
இதில் டாம் காரண் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவும், பென் மனேண்டி கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
இத்தகவலை சிட்னி சிக்சர்ஸ் அணியின் கேப்டன் ஹென்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கான மாற்று வீரர்களும் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now