
Top Australian Players Likely To Withdraw From Caribbean Tour (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணி வருகிற ஜூலை மாதம் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இத்தொடருக்கான ஆரோன் ஃபின்ச் தலைமையிலான 24 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பயோ பபுள் சூழல் காரணமாக பல முன்னணி ஆஸ்திரேலிய வீரர்கள் இத்தொடரிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியில், கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த வீரர்கள் பயோ பபுள் சூழலில் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகாமவுள்ளதால், அவர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.