Advertisement

ஜடேஜாவைத் தொடர்ந்து சிஎஸ்கேவிலிருந்து விலகுகிறாரா ருதுராஜ்?

ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பிடித்த இந்திய வீரர்கள் யார் யார் எனக் கேட்டபோது ‘சச்சின், விராட் கோலி, ரோஹித் ஷர்மா’ ஆகியோரைத்தான் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது தற்போது சிஎஸ்கே அணியில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisement
Training with Dhoni or dinner with Sachin? Ruturaj Gaikwad gives smart answer
Training with Dhoni or dinner with Sachin? Ruturaj Gaikwad gives smart answer (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 22, 2022 • 02:49 PM

ஐபிஎலில் வெற்றிகரமாக அணியாக திகழ்ந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீப காலமாகவே பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்றபோது, போட்டிகள் தொடங்கும் முன்பே சுரேஷ் ரெய்னா திடீரென்று நாடு திரும்பி ஷாக் கொடுத்தார். அதற்கான தெளிவான காரணம் இன்னமும் வெளியாகவில்லை. ஏதோ பிரச்சினை இருந்தது மட்டும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மெகா ஏலத்தின்போது கையில் 2 கோடிகள் மீதம் இருந்தும் ரெய்னாவை சிஎஸ்கே வாங்காதது சர்ச்சையை கிளப்பியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 22, 2022 • 02:49 PM

இதனைத் தொடர்ந்து ஐபிஎல் 15ஆவது சீசனில் ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. கேப்டன்ஸி அனுபவமே இல்லாத அவர், முதல் பாதி ஆட்டங்களில் தொடர்ந்து தோல்விகளைத்தான் அணிக்கு பெற்றுக்கொடுத்தார். மேலும் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் படுமோசமாக சொதப்பினார். இதனைத் தொடர்ந்து கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனி ஏற்றார். அந்த சமயத்தில் தனக்கு காயம் இருப்பதாக கூறி ஜடேஜா கடைசி சில போட்டிகளில் பங்கேற்கவில்லை.

Trending

தொடர் தோல்விக்கு ஜடேஜாதான் முழுக்காரணம் என தோனியும், சிஎஸ்கே நிர்வாகமும் விமர்சனங்களை முன் வைத்ததால்தான், அதிருப்தியடைந்த ஜடேஜா கடைசி சில போட்டிகளில் இருந்து விலகிச் சென்றதாக கூறப்பட்டது. மேலும், தோனியின் பிறந்த நாளுக்கு ஆண்டுதோறும் வாழ்த்துகளை தெரிவித்து வந்த ஜடேஜா, இந்த வருடம் வாழ்த்துகளை தெரிவிக்கவில்லை.

அதுமட்டுமல்ல, ஜடேஜா சிஎஸ்கேவுக்கு வந்து 10 வருடங்கள் ஆனதை கொண்டாடும் வகையில் சிஎஸ்கே வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவுக்கு ‘இன்னும் பல வருடங்கள் சிஎஸ்கேவுக்கு விளையாட விரும்புகிறேன்’ என பதிவிட்டிருந்த கமெண்டையும் ஜடேஜா அழித்து ஷாக் கொடுத்தார். இதனால், ஜடேஜா அடுத்த சீசனில் சிஎஸ்கேவுக்காக விளையாட மாட்டார் எனக் கருதப்படுகிறது.

இப்படி சர்ச்சைகளை தொடர்ந்துகொண்டு செல்லும் நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டும் புது சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார். இவர் சிஎஸ்கேவுக்கு வருவதற்கு பிறகுதான், உலகம் முழுவதும் கவனம் பெற்றார். மேலும், தோனி இல்லையென்றால், எனது திறமை முழுவதுமாக வெளி வந்திருக்காது. தோனிதான் எனது ரோல் மாடல் என பலமுறை கூறியிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ஜிம்பாப்வே தொடரில் இருக்கும் அவரிடம் உங்களுக்கு பிடித்த இந்திய வீரர்கள் யார் யார் எனக் கேட்டபோது ‘சச்சின், விராட் கோலி, ரோஹித் ஷர்மா’ ஆகியோரைத்தான் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார். இந்த கருத்தில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், ஜடேஜா பாணியிலேயே தோனியை புறக்கணித்துள்ளதுதான் கவனத்தை பெற்றுள்ளது. மேலும் ஜடேஜாவைப் போல ருதுராஜுக்கும் தோனி மீது எதுவும் மனஸ்தாபம் ஏற்பட்டிருக்குமோ என சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.

சிஎஸ்கேவின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட ஜடேஜா விலகும் நிலையில் இருக்கும்போது, ருதுராஜும் மூன்று வாரங்களுக்கு முன்புவரை தோனிதான் எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் எனக் கூறிவிட்டு, தற்போது இப்படியொரு பேட்டியை கொடுத்திருப்பது உற்றுநோக்க கூடியதுதான் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement