Advertisement

WTC தொடரில் புதிய வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயாகன் விருதை வென்றதன் மூலம் சிறப்பு சாதனையை படைத்துள்ளார்.

Advertisement
WTC தொடரில் புதிய வரலாறு படைத்த டிராவிஸ்  ஹெட்!
WTC தொடரில் புதிய வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 28, 2025 • 09:16 PM

Travis Head WTC record: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 10 முறை ஆட்டநாயகன் விருதை வென்ற உலகின் முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 28, 2025 • 09:16 PM

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது ஜூன் 25ஆம் தேதி பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. 

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 190 ரன்களில் ஆல் அவுட்டான நிலையிலும், 10 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியானது டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரின் அரைசதங்களின் காரணமாக 310 ரன்களைச் சேர்த்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 301 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றர். 

இந்நிலையில் இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். அதன்படி டிராவிஸ் ஹெட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரில் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அதில் 10 முறை 'ஆட்ட நாயகன்' விருதை வென்று, அதிகமுறை இந்த விருதை வென்ற உலகின் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Also Read: LIVE Cricket Score

கடந்த 2019ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது முதல் ஆட்டநாயகன் விருதை வென்ற டிராவிஸ் ஹெட், அதன் பிறகு, இங்கிலாந்து, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராகவும் ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் 5 முறை ஆட்டநாயகன் விருதை வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement