
Trent Boult Contradicts New Zealand Coach, Says He Will Play 2nd Test Against England Before WTC Fin (Image Source: Google)
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை முதல் தொடங்குகிறது. அதன்பின் நியூசிலாந்து அணி ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 15ஆம் தேதி நியூசிலாந்து அணி இங்கிலாந்து சென்று தனிமைப்படுத்தப்பட்டு, அதன்பின் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட், சக அணி வீரர்களுடன் இங்கிலாந்து செல்லாததால், அவர் இத்தொடரிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இன்னும் இங்கிலாந்து செல்லவில்லை.