
Trent Boult 'Excited' To Get Back Ahead Of 2nd Phase Of IPL 2021 (Image Source: Google)
சமகாலத்தின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட். 2011ஆம் ஆண்டிலிருந்து நியூசிலாந்து அணியில் ஆடிவரும் டிரெண்ட் போல்ட், 73 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 292 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதேபோல், 93 ஒருநாள் போட்டிகளில் 169 விக்கெட்டுகளையும், 34 டி20 போட்டிகளில் ஆடி 46 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் 737 புள்ளிகளுடன் ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
2020 ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிவரும் ட்ரெண்ட் போல்ட், மும்பை அணி 5வது முறையாக கோப்பையை வென்றபோது அந்த அணியில் முக்கிய பங்காற்றினார்.