Advertisement

டி20 உலகக்கோப்பை: ஷாஹீனை போல நானும் இந்திய அணியை வீழுத்துவேன் - ட்ரெண்ட் போல்ட்!

நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் இந்திய அணியை வீழ்த்தும் தனது திட்டம் குறித்து பேசியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan October 30, 2021 • 21:36 PM
Trent Boult's Plan Is To 'Mirror' Shaheen Afridi's Incredible Performance Against India
Trent Boult's Plan Is To 'Mirror' Shaheen Afridi's Incredible Performance Against India (Image Source: Google)
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் என்று இந்த தொடருக்கு முன்னர் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பேசப்பட்ட இந்திய அணியானது தங்களது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிக மோசமான தோல்வியை சந்தித்தது. 

அதைத் தொடர்ந்து தற்போது 2ஆவது லீக் போட்டியில் துபாய் சர்வதேச மைதானத்தில் நாளை நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்கும் என்கிற காரணத்தினால் நாளைய போட்டி இரு அணிகளுக்குமே வாழ்வா ? சாவா ? போட்டியாக அமைய இருக்கிறது. 

Trending


இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு சாதகமாக அமையும் என்கிற காரணத்தினால் இரு அணிகளுமே பலமாக போட்டியிடும். இதன் காரணமாக நாளைய போட்டியில் சுவாரஸ்யத்திற்கு சற்றும் பஞ்சமிருக்காது. 

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் இந்திய அணியை வீழ்த்தும் தனது திட்டம் குறித்து பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்,“பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இந்திய அணிக்கு எதிராக என்ன செய்தாரோ அதையே தான் தானும் செய்ய இருகிறேன். இந்திய அணியின் விக்கெட்டுகளை பவர்பிளே ஓவர்களிலேயே விரைவில் வீழ்த்தினால் நிச்சயம் இந்திய அணியை வீழ்த்த முடியும்.

Also Read: T20 World Cup 2021

அதன் படி நான் அவர்களை பவர்பிளே ஓவர்களிலேயே இன் ஸ்விங் டெலிவரிகள் மூலம் இந்திய அணியை நிச்சயம் வீழ்த்திக்காட்டுவேன்” என சவால் விட்டுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement