
Twitter feels Manish Pandey’s international career is over (Image Source: Google)
சிறப்பான ஃபார்மில் இருந்தும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடமுடியாமல் இருந்த வீரர்களுக்கெல்லாம் இலங்கை தொடர் அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது.
அந்தவகையில், முதல் இரண்டு போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காத சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கௌதம், சேத்தன் சக்காரியா ஆகிய 4 வீரர்களும் இன்று நடந்துவரும் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணொக்காக அறிமுகமாகினர். இதில் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 46 ரன்கள் அடித்து அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.
மேலும் இத்தொடரில் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், பிரித்வி ஷா ஆகிய இளம் வீரர்கள் அனைவரும் கிடைக்கும் வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்தி, நன்றாக விளையாடி தங்களுக்கான வாய்ப்பை உறுதி செய்து வருகின்றனர்.