
உலகெங்கும் டி20 தொடர்கள் பெரிய வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் வெஸ்ட் இண்டிஸில் 2013ஆம் ஆண்டு முதல் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஆறு அணிகளை கொண்டு நடத்தப்படும் இந்தத் தொடர் ரவுண்டு ராபின் முறையில் நடத்தப்படுகிறது. இந்த வருடமும் நேற்று முன்தினம் இந்த தொடர் ஆரம்பித்து உள்ளது.
நேற்று நடந்த போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியும், பார்படோஸ் ராயல்ஸ் அணியும் மோதின. போட்டிக்கான டாசில் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த ஜான்ஸ்சன் சார்லஸ் 30, ஃபாஃப் டு பிளிசிஸ் 46 ரன்கள் என வலிமையான தொடக்கம் தந்தார்கள். ஜிம்பாப்வே நாட்டின் ஜோடியான சீன் வில்லியம்ஸ் 47, சிக்கந்தர் ராசா 23 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களுக்கு 38 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய பார்படோஸ் ராயல்ஸ் அணிக்கு துவக்கம் தருவதற்கு ரஹீம் கார்ன்வால், கைய்ல் மேயர்ஸ் இருவரும் களமிறங்கினார்கள். வீசப்பட்ட ஆட்டத்தின் முதல் பந்திலேயே பரிதாபமான நிகழ்வு நடந்தது. முதல் பந்தை எதிர்கொண்ட ரஹீம் கார்ன்வால் பின்புறமாக லெஃக் சைடு பந்தை தட்ட, அங்கு நின்றிருந்த பீல்டரின் கையில் பந்து பட்டு நழுவியது, இந்த நேரத்தில் மேயர்ஸ் ரன்னுக்கு அழைக்க, கார்ன்வால் கிரீசை விட்டு வெளியே வந்து விட்டார்.
Tonight's @BetBarteronline magic moment is the run out of Rahkeem Cornwall that set the Saint Lucia Kings off on a fantastic PowerPlay! #CPL23 #SLKvBR #CricketPlayedLouder #BiggestPartyInSport #BetBarter pic.twitter.com/HgDtLWTjmK
— CPL T20 (@CPL) August 18, 2023