
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது ஐபிஎல் தொடரின் இறுதி கட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடர் முடிவடைய இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் அதாவது அக்டோபர் 17ஆம் தேதி முதல் உலக கோப்பை டி20 தொடரானது அங்கு துவங்க இருக்கிறது.
அதன்படி ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை அங்கு நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 15ஆம் தேதி வரை அணிகளுக்குள்ளேயான மாற்றங்கள் குறித்த விவரங்களை இறுதி படுத்திக் கொள்ளலாம் என ஐசிசி அனைத்து அணிகளுக்கும் கெடு விதித்துள்ளது.
இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணிகளில் மாற்றங்கள் ஏதாவது செய்ய வேண்டுமென்றால் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சில வீரர்களின் மோசமான ஃபார்ம் தற்போது அணியில் மாற்றத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.