
U-19 Asia Cup: India Beat Afghanistan By 4 Wickets With 10 Balls To Spare (Image Source: Google)
அண்டர் 19 அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா அண்டர் 19 அணி, ஆஃப்கானிஸ்தான் அண்டர் 19 அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் சுலைமான் சஃபி, அஹ்மத் அஹ்மதாஸி ஆகியோர் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அஹ்மத் அஹ்மதாஸி 86 ரன்களையும், சுலைமான் சஃபி 73 ரன்களையும் சேர்த்தனர்.