U19 ஆசிய கோப்பை: வங்கதேச அணி இமாலய வெற்றி!
குவைத் அணிக்கெதிரான அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியும், குவைத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குவைத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் மஃக்பிஜுல் இஸ்லாம் 119 பந்துகளில் 112 ரன்களை குவித்து அசத்தினார். அடுத்து எஸ்.எம் மெக்ரோப் 24 பந்துகளில் 42 ரன்களை விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.
Trending
இருப்பினும் வங்கதேச அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்களைக் குவித்தது. குவைத் அணி தரப்பில் அப்துல் சாதிக் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கைத் துரத்திக் களமிறங்கிய குவைத் அணியில் தொடக்க வீரர் மீட் பௌசர் மட்டும் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி 43 (77) ரன்களை சேர்த்தார்.
மற்றவர்கள் அனைவரும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார்கள். இதனால், குவைத் அணி 25.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்களை மட்டுமே சேர்த்தது.
வங்கதேச அணி தரப்பில் ரிப்பன் மோண்டோல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் வங்கதேச அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் குவைத் அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now