Advertisement

அண்டர் 19 உலகக்கோப்பை: அரையிறுதியில் ஆஸ்திரேலியா!

அண்டர் 19 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

Advertisement
U19 CWC: Australia Thrash Pakistan By 119 Runs; Enter Semi-Finals
U19 CWC: Australia Thrash Pakistan By 119 Runs; Enter Semi-Finals (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 29, 2022 • 12:20 PM

அண்டர் 19 உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குரூப் சி பிரிவில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தான் அணியும், குரூப் டி பிரிவில் 2ஆம் இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 29, 2022 • 12:20 PM

அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக் டீகே வில்லி 71 ரன்னும், கொரே மில்லர் 64 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் ஃகாசிம் அக்ரம் 3 விக்கெட்டும், அவைஸ் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Trending

இதையடுத்து, 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்துவீச்சில் பாகிஸ்தான் சிக்கி திணறியது. பாகிஸ்தான் அணியில் மெஹ்ரன் மும்தாஸ் 29 ரன்னும், அப்துல் பாசி 28 ரன்னும், இர்பான் கான் 27 ரன்னும் எடுத்தனர். 

இறுதியில், பாகிஸ்தான் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 119 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் வில்லியம் சல்மான் 3 விக்கெட்டும், டாம் விட்னி, ஜாக் சின்பீல்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி அண்டர் 19 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement