
U19 WC 2022: Bangladesh have been shot out for a paltry 111 (Image Source: Google)
அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் 8ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மெஹ்ரூப் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 ரன்களைச் சேர்த்தார். ஆனால் மற்ற வீரர்கள் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.