
சர்வதேச கிரிக்கெட்டின் வருங்கால இளம் ஹீரோக்களை கண்டறியும் வண்ணம் ஐசிசி நடத்தி வரும் அண்டர் 19 வீரர்களுக்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 14ஆவது சீசன் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெறுகிறது.
இந்த உலக கோப்பையில் நடப்புச் சாம்பியன் வங்கதேசம், முன்னாள் சாம்பியன் இந்தியா உள்ளிட்ட உலகின் 16 முன்னணி அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று, நாக் அவுட் சுற்று உட்பட மொத்தம் 48 போட்டிகளை அடங்கிய இந்த உலகக் கோப்பையானது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிலுள்ள ஆண்டிகுவா, டிரினிடாட் போன்ற 4 முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.
ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ள இந்த உலகக் கோப்பை நேற்று வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள கயானா நகரில் கோலாகலமாக தொடங்கியது. நேற்றைய முதல் போட்டியில் இந்த உலகக் கோப்பையை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.