
U19 World Cup: England Beat Defending Champions Bangladesh By 7 Wickets (Image Source: Google)
ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில் நடப்பு சாம்பியன் வங்கதேசம் அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் களம் இறங்கியது. இங்கிலாந்து அணியின் அபார பந்து வீச்சால் அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 35.2 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோசுவா பாய்டன் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.