இங்கிலாந்து டூர்: தனிமைப்படுத்தப்பட்ட இந்திய வீரர்கள் !
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி சவுத்தாம்டனிலுள்ள கிரிக்கெட் மைதான விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது. அதன்பின் இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
அதேபோல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்து சென்று ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக மும்பையில் உள்ள பிசிசிஐ விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இரண்டு வார தனிமைப்படுத்துதல் முடிவடைந்ததையடுத்து இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு மும்பையில் இருந்து தனி விமானத்தில் இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர்.
லண்டன் சென்றடைந்த இந்திய அணியினர் அங்கிருந்து சவுத்தம்டனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மைதான வளாகத்தில் உள்ள விடுதிகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
— BCCI (@BCCI) June 4, 2021
Excitement is building up as #TeamIndia arrive in England pic.twitter.com/FIOA2hoNuJ
வீரர்கள், வீராங்கனைகள் விடுதிகளில் 10 நாள்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிப்பார்கள் என்று தெரிகிறது. தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகு பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now