
Umesh Yadav receives first dose of COVID-19 vaccine (Image Source: Google)
கரோனா வைரஸின் இரண்டாம் அலை நாடு முழுவது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பயோ பபுளில் இருந்த கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றன.
இதையடுத்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் கரோனா வைரஸிற்காக தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் நேற்று கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.