
Umesh Yadav Wreaks Havoc In England, Scalps 5 Wickets At 3.53 Economy; Watch Video Here (Image Source: Google)
இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தர்ஹாம் அணி, மிடில்செக்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மிடிசெக்ஸ் அணிக்காக களமிறங்கினார்.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தர்ஹாம் அணியின் தொடக்க வீரர் கரம் கிளார்க் (0), கேப்டன் போர்த்விக் ஆகியோரை உமேஷ் யாதவ் அடுதடுத்த ஓவர்களில் வீழ்த்தி அசத்தினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் லீஸ் - மைக்கேல் ஜோன்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் 66 ரன்கள் எடுத்திருந்த அலெக்ஸ் லீஸ் விக்கெட்டை இழக்க மறுமுனையிலிருந்த் மைக்கேல் ஜோன்ஸ் சதமடித்தார். பின் அவரும் 119 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.