
'Unbelievable': David Miller Reflects On His Match-Winning Knock (Image Source: Google)
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த குவாலிஃபையர்-1 ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது. இதனால் குஜராத் அணிக்கு 189 ரன் இலக்காக இருந்தது.
பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. புதுமுக அணியான குஜராத் தனது முதல் சீசனிலேயே இறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதித்தது.
குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமான டேவிட் மில்லரை கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் வெவ்வேறு மாதிரியானவர்கள். நான் அவர்களை மதிக்கிறேன்.