
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வருகிற மார்ச் மாதம் 26-ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் இணைந்துள்ளதால் இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமும் பிப்ரவரி மாதம் பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது இந்த 15 ஆவது சீசனில் பங்கேற்க்கும் அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட தங்களது அணியில் உள்ள வீரர்களை தயார்படுத்தி உள்ள வேளையில் அனைவரும் இன்னும் ஓரிரு வாரங்களில் ஐபிஎல் தொடருக்காக பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த ஐபிஎல் ஏலத்தில் சன் ரைசர்ஸ் அணி பல முக்கிய வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்கியது.
அந்த வகையில் சன்ரைசர்ஸ் அணிக்கு மிடில் ஆர்டரில் அதிரடியான பேட்டிங் தேவை என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டனான அதிரடி ஆட்டக்காரர் நிக்கலஸ் பூரனை அதிகபட்ச விலை 10.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விலைக்கு வாங்கியிருந்தது.