
இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான கிஷன் கிஷன் இந்திய அணிக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இடதுகை அதிரடி ஆட்டக்காரரான இவர் 2016 ஆம் ஆண்டு முதலே ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் 2020ஆம் ஆண்டு மும்பை அணிக்காக தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னரே புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்.
தற்போது 23 வயது மட்டுமே நிரம்பிய இடதுகை அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷன் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டு தரப்புக்கும் எதிராக தனது அதிரடியால் ரன்களை விளாச கூடியவர். அவரின் மீது உள்ள நம்பிக்கை காரணமாகவே மெகா ஏலத்தில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடியே 25 லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
இந்த ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் போன வீரராகவும் இதன்மூலம் இஷான் கிஷன் சாதனை படைத்திருந்தார். இப்படி டி20 கிரிக்கெட்டில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆன ஹர்திக் பாண்டியா கூறியதாக தற்போது ஒரு தகவலை இஷான் கிஷன் பகிர்ந்துள்ளார்.