Advertisement

WPL 2024: யுபி வாரியர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan February 25, 2024 • 16:36 PM
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Advertisement

மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூர் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. அதன்படி நாளை நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணியும், மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் நடப்பு சீசனில் விளையாடிய தங்களது முதல் போட்டியில் கடைசிவரை போராடி தோல்வியைத் தழுவியுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தங்களது வெற்றி கணக்கை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - யுபி வாரியர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் -  இரவு 7.30 மணி 

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 02
  • யுபி வாரியர்ஸ் - 0

பிட்ச் ரிப்போர்ட்

இத்தொடரின் முதல் பாதி லீக் போட்டிகள் அனைத்தும் பெங்களூருவிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக இந்த மைதானத்தில் பேட்டர்கள் பெரிதளவில் சோபிக்க முடியும். மேலும்  இங்கு நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலுமே இறுதிப்பந்துவரை சென்றுள்ளதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் உறுதியாக நம்பலாம்.

உத்தேச லெவன்

யுபி வாரியர்ஸ்: அலிசா ஹீலி(கே), சோஃபி எக்லெஸ்டோன், தஹ்லியா மெக்ராத், தீப்தி ஷர்மா, ராஜேஸ்வரி கயக்வாட், கிரண் நவ்கிரே, விருந்தா தினேஷ், பூனம் கெம்னார், ஸ்வேதா செஹ்ராவத், கிரேஸ் ஹாரிஸ், சைமா தாக்கூர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர்: ஷஃபாலி வர்மா, மெக் லெனிங்(கே), ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிஸான் கப், அனாபெல் சதர்லேண்ட், அருந்ததி ரெட்டி, மின்னு மணி, தனியா பாட்டியா, ராதா யாதவ், ஷிகா பாண்டே.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - அலிசா ஹீலி, தனியா பாட்டியா
  • பேட்டர்ஸ் – மெக் லெனிங், ஷஃபாலி வர்மா, ஜேமிம்மா ரோட்ரிக்ஸ் (துணைக்கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - மரிஸான் கேப் (கேப்டன்), தஹ்லியா மெக்ராத், தீப்தி ஷர்மா, அலிஸ் கேப்சி
  • பந்துவீச்சாளர்கள் - சோஃபி எக்லெஸ்டோன், ஷிகா பாண்டே

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement