Advertisement
Advertisement
Advertisement

WPL 2024: யுபி வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan March 10, 2024 • 22:14 PM
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணியும், பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளிலும் அதிரடி வீராங்கனைகள் நிரைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணி  - யுபி வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் களத்தில் நின்று விளையாடும் பேட்டர்களும் அபாரமாக செயல்படமுடியும். அதேசமயம் இங்கு எதிரணியை தடுப்பது சவாலாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • யுபி வாரியர்ஸ் - 03
  • குஜராத் ஜெயண்ட்ஸ் - 00

உத்தேச லெவன்

குஜராத் ஜெயண்ட்ஸ்: லாரா வோல்வார்ட், பெத் மூனி (கே), தயாளன் ஹேமலதா, ஃபோப் லிட்ச்ஃபீல்ட், ஆஷ்லே கார்ட்னர், பாரதி ஃபுல்மாலி, கேத்ரின் பிரைஸ், ஸ்நே ராணா, தனுஜா கன்வர், மேக்னா சிங், ஷப்னம் ஷகில்.

யுபி வாரியர்ஸ்: அலிசா ஹீலி (கே), கிரண் நவ்கிரே, தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஸ்வேதா செஹ்ராவத், தீப்தி சர்மா, பூனம் கெம்னார், சோஃபி எக்லெஸ்டோன், கௌஹர் சுல்தானா, சைமா தாகூர், ராஜேஸ்வரி கயக்வாட்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: அலிசா ஹீலி, பெத் மூனி
  • பேட்டர்ஸ்: லாரா வோல்வார்ட்(கேப்டன்), ஃபோப் லிட்ச்ஃபீல்ட்
  • ஆல்-ரவுண்டர்கள்: கிரேஸ் ஹாரிஸ், தஹில் மெக்ராத், ஆஷ்லே கார்ட்னர், தீப்தி சர்மா(துணைக்கேப்டன்), கேத்ரின் பிரைஸ்
  • பந்துவீச்சாளர்கள்: சோஃபி எக்லெஸ்டோன், தனுஜா கன்வர்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement