
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில், ஒவ்வொரு அணியும் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் பெறும் வெற்றிகளை வைத்து வெற்றி விகிதங்கள் கணக்கிடப்பட்டு, அதன்படி வரிசைப்படுத்தப்படுகின்றன. இறுதிப்போட்டிக்கு முன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும்.
இதில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி அதில் வெற்றி பெற்று 100 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்துவந்த இலங்கை அணி, இந்தியாவிடம் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, 66.66 என்ற வெற்றி சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் 3ஆம் இடத்திற்கு பின் தங்கியுள்ளது. ஆம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியது.
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டிக்கு பின்னரும், ஆஸ்திரேலியா முதலிடத்திலும், பாகிஸ்தானும் இரண்டாமிடத்திலும் தான் உள்ளன. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சதவிகிதம் 86.66 சதவிகிதத்திலிருந்து 77.77 சதவிகிதமாக குறைந்துள்ளது. பாகிஸ்தான் அணி 66.66 வெற்றி சதவிகிதத்துடன் 2ம் இடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோற்ற இலங்கை அணி 100 சதவிகிதத்திலிருந்து 66.66 சதவிகிதமாக குறைந்து புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.