யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: நியூஜெர்ஸி லெஜண்ட்ஸை வீழ்த்தி கலிஃபோர்னியா நைட்ஸ் அசத்தல் வெற்றி!
நியூஜெர்ஸி லெஜண்ட்ஸுக்கு எதிரான டி10 லீக் ஆட்டத்தில் கலிஃபோர்னியா நைட்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அச்த்தியது.
டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சி தற்பொழுது கிரிக்கெட் உலகெங்கும் பரவ செய்திருக்கிறது. இந்த வகையில் அமெரிக்கா தற்போது கிரிக்கெட்டில் பெரிய ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் பத்து ஓவர்கள் கொண்ட யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10 லீக் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரிலும் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் - காலிஃபோர்னியா நைட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால் இப்போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஜெர்ஸி அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானிதது. அதன்படி களமிறங்கிய கலிஃபோர்னியா நைட்ஸுக்கு ஆரோன் ஃபிஞ்ச் - நர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Trending
இதில் ஃபிஞ்ச் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய இர்ஃபான் பதான் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நர்ஸ் 24 ரன்களையும், இர்ஃபான் பதான் 31 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் கலிஃபோர்னியா நைட்ஸ் அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 76 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் யுசுப் பதான் 4 ரன்களுக்கும், ஜெஸ்ஸி ரைடர் 14 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடிய கிறிஸ்டோபர் பார்ன்வெல் 29 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதனால் இன்னிங்ஸ் முடிவில் நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கலிஃபோர்னியா நைட்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் நியூஜெர்ஸி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த இர்ஃபான் பதான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now