
Uttarakhand govt appoints Rishabh Pant as state brand ambassador (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த். தனது அதிரடியான பேட்டிங் திறனால் மூன்று வகையிலான இந்திய அணியின் பிரதான வீரராக இவர் செயல்பட்டு வருகிறார்.
மேலும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் இவர் செயல்பட்டு வருகிறார். அதேசமயம் இந்திய அணியையும் அடுத்த சில ஆண்டுகளில் வழிநடத்துவார் என்ற கருத்துகளுல் உலா வருகின்றன.
இந்நிலையில் உத்ராகாண்ட் அரசு, ரிஷப் பந்தை தங்கள் மாநிலத்தின் விளம்பர தூதராக நியமித்துள்ளது. இதனை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.