Advertisement

டி20 உலகக்கோப்பை: வரலாற்று சாதனையை நிகழ்த்திய நமீபியா வீரர்!

டி20 உலககோப்பை போட்டிகளில் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை அதுவும் மூன்று வீரர்களையும் டக் அவுட் செய்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை நமீபியாவின் ரூபன் ட்ரெம்பல்மேன் படைத்துள்ளார்.

Advertisement
VIDEO: 23 Year-Old Trumpelmann Stuns Scotland, Takes 3 Wickets In The First Over
VIDEO: 23 Year-Old Trumpelmann Stuns Scotland, Takes 3 Wickets In The First Over (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 28, 2021 • 11:40 AM

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் தகுதிச்சுற்று அணியிலிருந்து தேர்வு ஆகிய அணிகள் சில அற்புதமான சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 28, 2021 • 11:40 AM

அந்த வகையில் நேற்று நமீபியா - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில் நமீபியா அணியை சேர்ந்த 23 வயதான ரூபன் ட்ரெம்பல்மேன் என்பவர் டி20 கிரிக்கெட்டில் யாரும் படைக்காத வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Trending

அதன்படி நேற்றைய போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நமீபியா முதல் ஓவரை வீச ரூபன் ட்ரெம்பல்மேனை அழைத்தது. அந்த முதல் ஓவரின் முதல் பந்தில் ஸ்காட்லாந்து அணியின் முன்னணி அதிரடி தொடக்க வீரரான முன்சேவை க்ளீன் போல்ட் மூலம் ஆட்டமிழக்க வைத்து ஸ்காட்லாந்து அணியை அதிரவைத்தார்.

பிறகு மூன்றாவது பந்தில் மெக்லாயிடு விக்கெட்டையும், 4ஆவது பந்தில் அந்த அணியின் கேப்டன் பெர்ரிங்க்டன் ஆகியோரை வீழ்த்தினார். இப்படி ஸ்காட்லாந்து அணியின் முதல் மூன்று வீரர்களை ஒரே ஓவரில் வீழ்த்திய ரூபன் ட்ரெம்பல்மேன் தற்போது வரலாற்று சாதனையில் இடம் பிடித்துள்ளார். அவரது இந்த சிறப்பான பவுலிங்கிற்கு பாராட்டுக்கு குவிந்து வருகிறது.

இந்த போட்டியில் 4 ஓவர் வீசிய ரூபன் ட்ரெம்பல்மேன் 17 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டி20 உலககோப்பை போட்டிகளில் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை அதுவும் மூன்று வீரர்களையும் டக் அவுட் செய்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லந்து 20 ஓவர்களின் முடிவில் 109 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய நமீபியா அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement