Advertisement

ஐபிஎல் 2021: சிறுவர்களுக்கு பந்தை பரிசளித்த தோனி!

டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு சிறுவர்களுகாக தான் கையொப்பமிட்ட பந்தினை பரிசாக வழங்கிய தோனியின் செயல் ரசிகர்களை நெகிச்சியடைய செய்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan October 11, 2021 • 22:08 PM
VIDEO: Dhoni Gifts Signed Ball To His Little Crying Fan After Qualifier 1
VIDEO: Dhoni Gifts Signed Ball To His Little Crying Fan After Qualifier 1 (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் நேற்று சிஎஸ்கே - டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்று சிஎஸ்கே முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சிஎஸ்கே அணி 6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Trending


சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி நேரத்தில் உதவியவர் எம்.எஸ்.தோனி. கடைசி 11 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் தோனிதான் இருந்தார். இந்த சீசன் முழுவதும் சொதப்பியிருந்த தோனி, திடீரென 3 பவுண்டரிகளை விளாசி வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் விண்டேஜ் தோனியை மீண்டும் பார்த்த ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இரண்டு குழந்தைகள் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். நேற்றைய போட்டியில் தோனி பேட்டிங் செய்துக்கொண்டிருந்த போது, குழந்தைகள் இருவர் கடவுளிடம் பிரார்த்தனை மேற்கொண்டனர். தோனி வெற்றி பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஆர்வத்துடன் காத்திருந்ததை போட்டியின் இடையே பெரிய திரையில் காண்பித்தார்கள். இதனை ஆட்டத்தின் போதே தோனி கவனித்தார்.

இறுதியில் தோனி பவுண்டரி அடித்து வெற்றி பெற்றுக்கொடுத்தவுடன் இரண்டு குழந்தைகளும் கண்ணீர் வடிய ஆனந்தத்தில் அழுதுத் தீர்த்தனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த கால சிறுவர், சிறுமிகளும் தோனியின் மீது காதல் வைத்துள்ளனர் என்பதை பார்த்து அனைவரும் திகைத்துப்போனார்கள். தோனியும் திகைத்துப்போனார் என்றே கூறலாம்.

 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதனால் ஆட்டம் முடிந்து பெவிலியன் திரும்பிய தோனி, சிறுவர்கள் இருவரும் இருந்த இடத்திற்கு கீழே சென்று கையை உயர்த்தி உற்சாகப்படுத்தினார். மேலும் அவர்களுக்கு சர்ஃபரைஸ் கிஃப்ட் ஒன்றையும் கொடுத்தார். தனது கையில் இருந்த மேட்ச் பந்தில் கையெழுத்து போட்டு, அதனை சிறுவர்களிடம் தூக்கி போட்டார். அவரின் இந்த செயலால் அந்த குழந்தைகள் நெகிழ்ந்த புகைப்படங்கள் வைராகி வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement