VIDEO: Karunaratne Smacks Shot Right On Debutant Solozano's Face, Stretched To Hospital (Image Source: Google)
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கல்லேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடி வருகிறது.
இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜெர்மி சோலோசானோ அறிமுக வீரராக களமிறங்கினார். இப்போட்டியின் 24ஆவது ஓவரின் போது இலங்கை அணி கேப்டன் திமுத் கருணரத்னே பேட்டிங் செய்துகொண்டிருந்தார்.
அந்த ஓவரின் போது கருணரத்னே அடித்த பலமான ஷாட் ஒன்று ஷார்ட் லெக்கில் (Short Leg) பீல்டிங் செய்துகொண்டிருந்த சோலோசானோவின் முகத்தைப் பதம்பார்த்தது.