
ஐபிஎல் தொடரின் 41ஆவது லீக் போட்டி சார்ஜா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்திஅபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது டெல்லி அணியின் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தற்செயலாக தினேஷ் கார்த்திக்கை பேட்டால் தாக்க சென்ற சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி போட்டியின் 17ஆவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச அப்போது வழக்கம்போல தினேஷ் கார்த்திக் பின்னால் நின்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் அடுத்த பந்தை ரிஷப் பண்ட் அதிரடியாக அடிக்க முயன்றார்.
ஆனால் பந்து அவரது பேட்டில் உட்புறமாக பட்டு ஸ்டம்பை நோக்கி சென்றது. உடனே பந்து ஸ்டம்பில் படக்கூடாது என்று பேட்டை சுழற்றினார். மேலும் தினேஷ் கார்த்திக் உள்ளே வருவதை பண்ட் சற்றும் எதிர்பார்கவில்லை.