டுசெனை ஏமாற்றிய ரிஷப் பந்த்; கண்டனம் தெரிவித்த வர்ணனையாளர்கள்!
வெண்டர் டுசன் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு ரிஷப் பந்த் செய்த ஏமாற்று வேலை தான் காரணம் என வர்ணனையாளர்கள் விமர்சித்துள்ளனர்.
இந்தியா - தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 50 ரன்கள் எடுத்தார். நட்சத்திர வீரர்கள் ரஹானே, புஜாரா ஆகியோர் சொதப்பிய நிலையில், தமிழக வீரர் அஸ்வின் 45 ரன்கள் விளாசினார்
Trending
இதனையடுத்து 35 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற ஸ்கோருடன் தென் ஆப்பிரிக்க அணி 2ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. தென்னாப்பிரிக்க அணியின் இளம் வீரர் பீட்டர்சன், எல்காருடன் ஜோடி சேர்த்து 2ஆவது விக்கெட்டுக்கு 74 ரன்களை சேர்த்தனர். கேப்டன் டீன் எல்கார் 28 ரன்களில் ஆட்டமிழந்தார், சிறப்பாக விளையாடிய பீட்டர்சன் 62 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்
ரசிகர்களால் லார்ட் என்று அழைக்கப்படும் ஷர்துல் தாக்கூர், அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்த தென் ஆப்பிரிக்காவுக்கு லேசான சரிவை கண்டது. இதில் வெண்டர் டுசன் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு நமது ரிஷப் பந்த் செய்த ஏமாற்று வேலை தான் காரணம். வெண்டர்டுசன் அடித்த பந்தை ரிஷப் பந்த் பிடித்துவிட்டதாக கூறி, அவுட் கேட்டார்
அதற்கு நடுவரும் அவுட் வழங்கிவிட்டார். வெண்டர்டுசனும் ரிவியூ கேட்காமல் பெவிலியன் நோக்கி செல்ல, மதிய உணவுக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது வெண்டர் டுசன் விக்கெட்டை ரீப்ளே செய்து பார்த்த போது, கீழே விழுந்த பந்தை ரிஷப் பந்த் கேட்ச் பிடித்துவிட்டது தெரியவந்தது.எனினும் வெண்டர் டுசன் களத்தை விட்டு சென்றுவிட்டதால் அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
— Bleh (@rishabh2209420) January 4, 2022
இந்த காட்சியை பார்த்து விட்டு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வர்ணனையாளர்கள் ரிஷப் பந்த்க்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் கவாஸ்கர், வெண்டர் டுசன் களத்திலேயே நின்று ரிவியூ கேட்காமல் சென்றது அவரது தப்புதான் என்று கூறினார். இந்தியா தவறு செய்ததால், வெண்டர் டுசனை மீண்டும் பேட்டிங் செய்ய அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடைபெறவில்லை.
Win Big, Make Your Cricket Tales Now