Advertisement

ரிஷப் பந்திற்கு மன்னிப்பே கிடையாது - சுனில் கவாஸ்கர் காட்டம்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மோசமாக விளையாடி ஆட்டமிழந்த ரிஷப் பந்தை முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சுநீல் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement
VIDEO: Rishabh Pant Tries To Smack A Big Shot After Arguing With Rassie; Goes For A Duck
VIDEO: Rishabh Pant Tries To Smack A Big Shot After Arguing With Rassie; Goes For A Duck (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 05, 2022 • 07:20 PM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய வீரர்கள் புஜாரா ரஹானாவும் அரை சதங்கள் எடுத்த நிலையில்  இந்திய அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 05, 2022 • 07:20 PM

இதையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று, ரிஷப் பந்த் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ரபாடாவின் பந்தை முன்னேறி வந்து அடிக்க முயன்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

Trending

ரிஷப் பந்தின் ஆட்டத்தை விமர்சித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சுநீல் கவாஸ்கர், “ஆடுகளத்தில் இரு புதிய பேட்டர்கள் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் அப்படியொரு ஷாட்டை விளையாடுகிறார் ரிஷப் பந்த்.  அந்த ஷாட்டுக்கு மன்னிப்பே கிடையாது. 

 

அதுதான் அவருடைய இயற்கையான ஆட்டம் என்கிற அபத்தம் எல்லாம் தேவையில்லை. இங்கு பொறுப்பை வெளிப்படுத்த வேண்டும். புஜாரா, ரஹானே ஆகிய இருவரும் பந்தால் அடிவாங்கியபடி விளையாடினார்கள். நீங்களும் போராட வேண்டும். நான் சொல்கிறேன், (இப்படி விளையாடினால்) ஓய்வறையில் ஆதரவான வார்த்தைகள் உங்களுக்குக் கிடைக்காது” என்று தெரிவித்தார். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று முதல் ரிஷப் பந்த் மோசமாகவே விளையாடி வருகிறார். கிட்டத்திட்ட 13 இன்னிங்ஸில் ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement