
VIDEO: Sri Lanka's Kumara Involves Himself In A Verbal Spat With Bangladesh's Liton Das (Image Source: Google)
டி20 உலகக் கோப்பையின் இன்று நடைப்பெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்கசே அணிகள் விளையாடின. இப்போட்டியில் இலங்கை அணி 172 ரன்களை எடுத்து வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் பவர் பிளேவின் கடைசி ஓவரில் லஹிரு குமார் பந்தை தூக்கி அடிக்க முயன்று ஷனாகாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழந்தவுடன் லிட்டன் தாஸை நோக்கி லஹிரு குமாரா ஆக்ரோஷமாக பேசி நடந்தார். லிட்டன் தாஸும் பதிலுக்குக் கடுமையாகப் பேச வாக்குவாதம் ஏற்பட்டது. முகமது நைம் வாக்குவாதத்தை விலக்கிவிட குமாரைத் தள்ளினார்.