
Vijay Hazare Cup: UP, Vidarbha advance to quarterfinals ! (Image Source: Google)
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் உத்திர பிரதேசம் - மத்திய பிரதேசம் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேச அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சுபம் சர்மா 83 ரன்களைச் சேர்த்தார். உபி அணி தரப்பில் யாஷ் டியால் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய உத்திர பிரதேச அணி முதலில் தடுமாறினாலும், அக்ஷ்தீப் நத் - ரிங்கு சிங் ஆகியோரது அரைசதத்தினால் 49ஆவது ஓவரில் இலக்கை எட்டியது.