Advertisement

விஜய் ஹசாரே கோப்பை: தினேஷ் கார்த்திக், இந்திரஜித் சிறப்பான ஆட்டம்; பெங்காலுக்கு 296 இலக்கு!

பெங்கால் அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 296 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
Vijay Hazare Trophy 2021-22: Dinesh Karthik, Baba Indrajith's fifty helps TN post a total on 295
Vijay Hazare Trophy 2021-22: Dinesh Karthik, Baba Indrajith's fifty helps TN post a total on 295 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 11, 2021 • 02:16 PM

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாம் சுற்று போட்டியில் தமிழ்நாடு - பெங்கால் அணிகள் விளையாடி வருகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 11, 2021 • 02:16 PM

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பந்துவீசியது. தமிழ்நாடு அணி தரப்பில் இன்னிங்ஸைத் தொடங்கிய சாய் சுதர்சன் 12 ரன்னிலும், கேப்டன் ஜெகதீசன் 31 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

Trending

அதன்பின் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர்கள் பாபா இந்திரஜித் - தினேஷ் கார்த்திக் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் இந்திரஜித் 64 ரன்களில் ஆட்டமிழக்க, 87 ரன்களைச் சேர்த்திருந்த தினேஷ் கார்த்திக்கும் விக்கெட்டை இழந்தார். 

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஜெகதீசன் கௌசிக் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்களைச் சேர்த்தது. 

பெங்கால் அணி தரப்பில் முகேஷ் குமார், ஆகாஷ் தீப் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்கால் அணி விளையாடி வருகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement