
Vijay Hazare Trophy 2021-22 Final: Dinesh Karthik's ton helps TN post a total on 323 (Image Source: Google)
நடப்பாண்டிற்கான விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - ஹிமாச்சல பிரதேச அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற ஹிமாச்சல் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணியின் ஜெகதீசன், அபாரஜித், சாய் கிஷோர், முருகன் அஸ்வின் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் - பாபா இந்திரஜித் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தனர்.