
Vijay Hazare Trophy 2021-22: HP restricted UP by 207 runs (Image Source: Google)
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் உத்திர பிரதேசம் - ஹிமாசல பிரதேசம் அணிகள் விளையாடி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஹிமாச்சல் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய உபி அணியின் அபிஷேக் கோஸ்வாமி, ஆர்யன் ஜுயல், கரன் சர்மா, சமீர் ரிஸ்வி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த அக்ஷ்தீப் நாத் - ரிங்கு சிங் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தில் அணியை மீட்டெடுத்தது. இதில் ரிங்கு சிங் அரைசதம் கடக்க, மறுமுனையிலிருந்த அக்ஷ்தீப் சிங் 32 ரன்களோடு நடையைக் கட்டினார்.