
Vijay Hazare Trophy 2021-22: Ruturaj Gaikwad scores century against Kerala, slams 3 tons in a row (Image Source: Google)
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 3ஆவது சுற்று ஆட்டத்தில் மகாராஷ்டிரா - கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேரள அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய மகாராஷ்டிரா அணியில் யாஷ் நாகர், அங்கித் பாவ்னே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கெய்க்வாட் - ராகுல் திரிபாதி இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்தினார்.