
Vijay Hazare Trophy 2021-22: Tamil Nadu-Karnataka Set For Interesting Clash (Image Source: Google)
விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கோப்பைக்கான இறுதிக்கட்ட போட்டிகள் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் கால் இறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் முடிந்தது.
அதன்படி தமிழ்நாடு, சவுராஷ்டிரா, இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா, விதர்பா, கேரளா, சர்வீசஸ் ஆகிய 8 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.
கால் இறுதி ஆட்டங்கள் நாளை நடக்கிறது. இதில் தமிழ்நாடு அணி காலிறுதி ஆட்டத்தில் கர்நாடகாவை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்று தமிழ்நாடு அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.