
Vijay Hazare Trophy: Karnataka beat Rajasthan by 8 wickets (Image Source: Google)
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் கர்நாடகா - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், தீபக் ஹூடாவின் அதிரடியான சதத்தினால் 200 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 109 ரன்களைச் சேர்த்தார். கர்நாடக அணி தரப்பில் விஜயகுமார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.