
Vijay Hazare Trophy: Ruturaj Gaikwad smashes 4th century in 5 matches; joins Virat Kohli, Prithvi Sh (Image Source: Google)
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது சுற்று ஆட்டத்தில் மத்திய பிரதேசம் - சண்டிகர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய சண்டிகர் அணிக்கு கேப்டம் மனன் வோரா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். 139 பந்துகளை எதிர்கொண்ட வோரா 2 சிக்சர், 13 பவுண்டரிகள் என 141 ரன்களைச் சேர்த்தார்.
அவருக்கு துணையாக அர்ஸ்லன் கான் 87 ரன்களையும், அங்கித் கௌஷிக் 56 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்களைச் சேர்த்தது.