
Vijay Hazare Trophy: Tamil Nadu beat Bengal by 136 runs (Image Source: Google)
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது சுற்று லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - பெங்கால் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பந்துவீசியது.
இதையடுத்து இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு அணி தினேஷ் கார்த்திக், பாபா இந்திரஜித் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 87 ரன்களையும், பாபா இந்திரஜித் 64 ரன்களையும் சேர்த்தனர். பெங்கால் அணி தாரப்பில் முகேஷ் குமார், அங்கித் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.